×

பஜ்ரங் தளம் தொடர்ந்த அவதூறு வழக்கு கார்கேவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சாங்ரூர்: பஜ்ரங் தளம் தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தது. மேலும் தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பை போன்று பஜ்ரங்தளத்தை தடை செய்வோம் என்றார்.

கார்கேவுக்கு எதிராக பஜ்ரங் தளம் இந்துஸ்தான் என்று அழைக்கப்படும் அமைப்பின் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ் பஞ்சாப் மாநிலம் சாங்ரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு சாங்ரூர் நீதிமன்றம் கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post பஜ்ரங் தளம் தொடர்ந்த அவதூறு வழக்கு கார்கேவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Karke ,Bajrang ,Sangrur ,Punjab ,Congress ,Malligarjune Karke ,Bajrang site ,
× RELATED வாக்கு சதவீதம் குறித்த தரவுகளில்...